இடிமின்புயல் ஆஸ்துமா எச்சரிக்கைகள், நோயறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி கண்டறியவும். இந்த புல் மகரந்த பருவகாலத்திற்குத் தயாராகுங்கள்.
இடிமின்புயல் ஆஸ்துமா என்றால் என்ன?
விக்டோரியாவில், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை புல் மகரந்தப் பருவம் வழக்கமாக இடம்பெறும் காலமாகும். இந்தக் காலத்தில், ஆஸ்துமா மற்றும் வைகோல் காய்ச்சல் அதிகரிப்பை நீங்கள் அவதானிக்கலாம். இந்தப் பருவகாலம் இடிமின்புயல் ஆஸ்துமா வருவதற்கும் வாய்ப்பாகும்.
வளியில் புல் மகரந்தம் போன்றவை ஏராளமாக இருக்கும்போதும், ஒரு குறிப்பிடத்தக்க இடிமின்புயல் இருக்கும்போதும் இடிமின்புயல் ஆஸ்துமா ஏற்படலாம். புல் மகரந்த துகள்கல் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு நீண்ட தூரம் கொண்டுசெல்லப்படுகின்றன. இடிமின்புயலுக்கு சற்றுமுன் வரும் காற்றுச் சுழற்சியில் குவிந்துள்ள துகள்களை சில தானியங்கள் உடைந்து சிதறி வெளியேற்றுகின்றன. சுவாசப்பைக்குள் ஆழமாகப் போகக்கூடியளவிற்குத் துகள்கள் மிகவும் சிறிதானவை மற்றும் முன்னர் ஒருபோதும் ஆஸ்துமாவால் பீடிக்கப்படாதவர்களுக்கும் ஆஸ்துமாவுக்கான நோயறிகுறிகள் விரைவாகத் தூண்டும்.
இந்த நோய் நிலைமைகளின்போது, சிறிதளவு காலத்தில் பலருக்கு ஆஸ்துமா நோயறிகுறிகள் ஏற்படும்போது, இடிமின்புயல் ஆஸ்துமாவென இது அறியப்படும்.
யார் அபாயத்தில் இருக்கிறார்கள்?
தற்போதய அல்லது கடந்தகால ஆஸ்துமா, கண்டறியப்படாத ஆஸ்துமா அல்லது வசந்தகால வைக்கோல் காய்ச்சல் போன்றவற்றுடனானவர்கள், இடிமின்புயல் ஆஸ்துமாவினால் ஆபத்தில் இருக்கும் மக்களுக்குள் அடங்குவர். ஆஸ்துமா மற்றும் வைக்கோல் காய்ச்சல் ஆகிய இரண்டினையும் கொண்டிருக்கும் ஆட்களுக்கு, விசேடமாக அவர்களுடைய ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தாதுவிட்டால், ஆபத்து மிகவும் கூடியதாயிருக்கும்.
இந்தப் புல் மகர்ந்த பருவகாலத்தில் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
பின்வரும் இலகுவான படிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் உங்களையும், உங்களின் பராமரிப்பில் இருப்பவர்களையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ளலாம்.
- தொற்றுநோய் இடிமின்புயல் ஆஸ்துமா ஆபத்து முன்னறிவிப்பைக் கண்காணிக்கவும்:
- விக்டோரியா இடிமின்புயல் ஆஸ்துமா முன்னறிவிப்பு இணையத்தளத்தைப் பாருங்கள்
- AppStore அல்லது Google Play ஊடாக Vic Emergency தரவிறக்கம் செய்யவும்.
- இடிமின்புயலின்போது, விசேடமாக அதைத்தொடர்ந்து புயல்வீசும்போது, வீட்டுக்கு வெளியில் இருக்கவேண்டாம். வீட்டுக்குள்ளே போய் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடவும். வெளியிலிருந்து மகிழுந்து அல்லது வீட்டினுள்ளே காற்றைக் கொண்டுவரும் ஏதேனும் குளிரூட்டி அமைப்புகளைத் துண்டிக்கவும் (விசேடமாக ஆவியாகும் ஏர் கொண்டிஷனர்கள்).
- அறிவுறுத்தப்பட்டவாறு உங்களுடைய தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.
- ஆஸ்துமா பாதிப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவதென அறிந்துகொள்ளவும். ஆஸ்துமா செயற்திட்டம் அல்லது ஆஸ்துமா முதலுதவிப் பாவனையைப் பின்பற்றவும்.
ஆஸ்துமா
- உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் - ஆஸ்துமா கட்டுப்படுத்தலைச் சரிபார்ப்பதற்கு உங்களுடைய பொது வைத்தியருடன் பேசவும். மேலும், சரியான ஆஸ்துமா மருந்து உங்களிடம் இருப்பதையும், சரியாக அதனை நீங்கள் பாவிக்கிறீர்களென்பதையும் உறுதிப்படுத்துவதற்காக உங்களுடைய ஆஸ்துமா செயற்திட்டத்தை மீள்பரிசீலனைசெய்து புதுப்பிக்கவும். அறிவுறுத்தப்பட்டதுபோல ஆஸ்துமா தடுப்புமருந்தை எடுப்பது மிக மிக முக்கியமானதாகும் என்பதை நினைவில்கொள்ளவும். இடிமின்புயல் ஆஸ்துமா உட்பட, ஆஸ்துமா நோயறிகுறிகளைத் தடுப்பதற்கு இது உதவுகிறது.
- எப்போதாவது உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், இடிமின்புயல் ஆஸ்துமாவின் ஆபத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பது பற்றி உங்களுடைய பொது வைத்தியருடன் பேசவும்.
- உங்களுக்கு ஓசைபட மூச்சுவிடல் (wheezing), மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் அல்லது தொடர்ந்து இருமல் போன்றவை இருந்தால், உங்களுடைய பொதுவைத்தியருடன் பேசவும். உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா மற்றும் அந்த நோயறிகுறிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கண்டறிய அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
- உங்களுடைய நிவாரண மருந்தை எப்போதும் கொண்டுசெல்லவும் - இது உங்களுடைய அவசரகால ஆஸ்துமா முதலுதவி மருந்தாகும்.
மெதுவான ஆஸ்துமா நோயறிகுறிகளுக்கு, உங்களுடைய பொதுவைத்தியரைப் பார்க்கவும், மருந்தாளருடன் பேசவும் அல்லது பிற பராமரிப்பு விருப்பத்தெரிவுகளை அணுகவும். உங்களுடைய நோய் நிலை மேம்படாவிட்டால் அல்லது மோசமடைந்தால், 000-ஐ அழையுங்கள் அல்லது வைத்தியசாலைக்குப் போகவும்.
வைக்கோல் காய்ச்சல்
- உங்களுக்கு வசந்தகால வைக்கோல் காய்ச்சல் இருந்தால், மருந்தாளர் அல்லது பொது வைத்தியருடன் கல்ந்துரையாடவும். ஒரு வைக்கோல் காய்ச்சல் சிகிச்சைத் திட்டத்தை நீங்கள் உருவாக்க அவர்கள் உங்களுக்கு உதவலாம் அத்துடன் இடிமின்புயல் ஆஸ்துமாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் வழிகளை அவர்கள் தெரிவிப்பார்கள் ஒருவேளை உங்களுக்கு இடிமின்புயல் ஆஸ்துமா ஏற்பட்டிருந்தால், ஒரு ஆஸ்துமா நிவாரணி பஃபரை உடனடியாக எங்கே பெறலாமென்பதைத் தெரிந்து வைத்திருத்தலை இது உள்ளடக்கும் - வைத்தியரின் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்தாளரிடமிருந்து இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
- உங்களுக்கு ஆஸ்துமா நோயறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், ஆஸ்துமா முதலுதவியின் படிமுறைகளைப் பின்பற்றவும் அத்துடன் பொது வைத்தியரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
- உங்களுடைய வைக்கோல் காய்ச்சலுடன் கூடிய ஏதேனும் ஆஸ்துமா நோயறிகுறிகளை நீங்கள் அனுபவித்திருந்தால் அல்லது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால், உங்களுடைய பொது வைத்தியரைப் பார்க்கவும். நோயைக் கண்டறிந்ததும், நீங்கள் நன்றாக உணரவும், சிறப்பாகச் சுவாசிக்கவும் செயற்திறன்மிக்க சிகிச்சையை நீங்கள் பெறலாம்.
ஆஸ்துமா முதலுதவி
ஆஸ்துமா முதலுதவியை அறிந்திருப்பது சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் முக்கியமானதாகும். Better Health Channel, Asthma மற்றும் National Asthma Council இலிருந்து ஆஸ்துமா முதலுதவி தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பின்வருவன இருந்தால் உடனடியாக மூன்று பூச்சியத்தை (000) அழைக்கவும்:
- இந்த நபர் சுவாசிக்கவில்லை
- அவர்களுடைய ஆஸ்துமா திடீரென மோசமடைகிறது அல்லது மேம்படவில்லை
- ஆஸ்துமா பாதிப்பு இந்த நபருக்கு இருக்கிறது அத்துடன் நிவாரண மருந்து கிடைக்கவில்லை
- இது ஆஸ்துமாவா என்பது இந்த நபருக்கு நிச்சயமில்லை
- அந்த நபருக்கு கடுமையான ஒவ்வாமை (anaphylaxis) இருப்பதாகத் தெரிகிறது. விடயம் இதுவானால், தோல் நோயறிகுறிகள் இருந்தாலும், எப்போதும் முதலில் adrenaline autoinjector-ஐயும், பின்னர் நிவாரணியையும் கொடுக்கவும்
பிற மொழிகளில் இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள, 131 450-இல் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவையைத் (Translating and Interpreting Service (TIS தொடர்புகொண்டு (அழைப்பு இலவசம்) கடமையில் இருக்கும் தாதியை அழைக்குமாறு கேளுங்கள் (Nurse-on-Call).
நீங்கள் செவிப்புலன் அற்றவரானால், காதுகேட்காவிட்டால், அல்லது பேச்சு/தொடர்பாடல் தடங்கல் இருந்தால், National தொடர்புகொண்டு Nurse-on-Call-ஐ அழைக்குமாறு அவர்களைக் கேளுங்கள்.
தொடர்புடைய தகவல்கள்
- சிறந்த சுகாதார வழி இடிமின்புயல் ஆஸ்துமா இணையத்தளம்
- இடிமின்புயல் ஆஸ்துமா
- மெல்போர்ன் மகரந்தம் இணையத்தளம் Melbourne Pollen அல்லது செயலி
- ஆஸ்துமா
- ஆஸ்திரேலிய தேசிய ஆஸ்துமா சபை (National Asthma Council Australia)-ஐ
எங்கே உதவியைப் பெறுவது
- அவசரகாலத்தில், எப்போதும் மூன்று பூச்சியத்தை (000) அழைக்கவும்.
- விக்டோரியாவில் அவசர பராமரிப்பு சேவைகள்
Content disclaimer
Content on this website is provided for information purposes only. Information about a therapy, service, product or treatment does not in any way endorse or support such therapy, service, product or treatment and is not intended to replace advice from your doctor or other registered health professional. The information and materials contained on this website are not intended to constitute a comprehensive guide concerning all aspects of the therapy, product or treatment described on the website. All users are urged to always seek advice from a registered health care professional for diagnosis and answers to their medical questions and to ascertain whether the particular therapy, service, product or treatment described on the website is suitable in their circumstances. The State of Victoria and the Department of Health shall not bear any liability for reliance by any user on the materials contained on this website.